Recent Updates

6/recent/ticker-posts

Header Ads Widget

Pondicherry arun About


பாண்டிச்சேரி அருண் புதுவையில் 05.06.1987 அன்று பிறந்த அருண் சிறுவயதில் இருந்தே கேமிராக்கள் மீது ஆர்வம் கொண்டவர் இந்த ஆர்வம் அவரின் தாயிடமிருந்து ஆரம்பமானது அருணின் தாயார் அருணின் சிறுவயது புகைப்படங்களை அவரே எடுக்க ஆரம்பித்தார்.தன் தாய் மற்றும் அருணின் சித்தி புகைப்படங்கள் எடுப்பதை பார்த்து சிறுவயதிலேயே அவருக்கு புகைப்பட கலையில் ஆர்வம் வர ஆரம்பித்தது தன சிறுவயதிலேயே பிலிம் ரோல் காமிராவில் எடுக்க ஆரம்பித்தார் பிறகு 2002 ஆம் ஆண்டு டிஜிட்டல் காமிரா புதுவைக்கு வர ஆரம்பித்தது அந்நாட்களில் அவர் பள்ளி பருவத்தில் இருந்தார் அப்போதே அந்த நாட்களில் அந்த டிஜிட்டல் காமிராவில் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தார் புதுவையை இன்றளவும் சில புதுவையின் பார்க்கமுடியாத புகைப்படங்கள் இவரிடம் உள்ளது.பள்ளி படிப்பு முடிந்ததும் diesel Mechanical படிப்பினை 2005 ஆம் ஆண்டு படிக்க துவங்கினார் ரயில்வே LOCO Pilot (ரயில் என்ஜின் டிரைவர் ) ஆவதே இவரது கனவாக இருந்தது 2005-ல் 2006-ம் ஆண்டு வரை படித்து பட்டம் வாங்கிவிட்டு ரயில் ஓட்டுவதற்கான பயிற்சியையும் முடித்தார் ஆனால் அவரின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாத அவரது 3 தாய்மார்கள் வேலை என்று வந்த வுடன் அச்சம் ஏற்பட்டது ஏனென்றால் ரயில் ஓட்டும் வேலை மிகவும் கண்டினமான மற்றும் Risk நிறைந்த வேலை என்பதால் அச்சம் கொண்டனர் இதனை தெரிந்து கொண்ட அருண் தன விருப்பத்தை விட தையர்களின் விருப்பமே முக்கியம் என்று அந்த வேலையினை விட்டுவிட்டார் பின்பு Diploma in Webdesign படித்து விட்டு webdesigner ஆனார் அவரே சொந்தமாக நிறுவனங்களுக்கு இணைத்தலைகளை உருவாக்கி கொடுத்துக்கொண்டு இருக்கிறார் .தன வேலை நேரம் போக மற்ற நேரங்களை வீண் அடிக்காமல் புகைப்படங்கள் எடுக்க துவங்கினார் . 2006 ஆம் ஆண்டு orkut சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பின்பு 2009 ஆம் ஆண்டு facebook சமூக வலைத்தளத்தில் இணைந்தார் அவரின் புகைப்பட திறமையை காண்பிக்கவே அவர் சமூக வலைத்தளங்களில் இனைந்து அவர் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார் .வருடத்தில் 365 நாட்களும் நாள் தவறாமல் 2 புகைப்படங்கள் Facebook ,instagram மற்றும் அவரது website www.pondicherryarun.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்வர் புதுவையின் அன்றாட காட்சிகளை படம் பிடிக்க அதிகாலை லெனின் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு காமிராவுடன் அவரது சைக்கிளில் புறப்பட்டு புதுவை வீதிகள் ,பெரியக்கடை ,உழவர் சந்தை ,வைட் டவுன் வீதிகள் ,புதுவை கடற்கரை சாலை மற்றும் சூரிய உதயத்தி எடுப்பது வாடிக்கையாக கொண்டுள்ளார் .வார இறுதி நாட்களில் modeling photography எடுப்பார் இவர் எடுத்த modeling photography-ல் 1940 ஆம் ஆண்டு வாழ்ந்த ஒரு அயல் நாட்டு பெண்மணி புதுவை வீதிகளில் வருவது போல் எடுத்த புகைப்படம் மக்களிடையே பெரும் பாராட்டையும் மற்றும் கொல்கத்தாவில் உள்ள புகைப்பட குழுவில் 1 லட்சம் பரிசுக்கு பரிந்துரை ஆனது .மற்றும் நேரம் கிடைக்கும்போது தன புகைப்பட நண்பர்களுடன் சேர்ந்து புதுவையை சுற்றியுள்ள கிராம பகுதிகளை படம் பிடிப்பார் அவரின் அணைத்து முயற்சிகளுக்கும் அவரது 3 தாயார்களும் இன்றளவும் உறுதுணையாக நிற்கிறார்கள் அதுவே அவரது வெற்றிக்கு காரணம் .அதுமட்டுமல்லாது NCC-ல் இருந்து இவருக்கு அழைப்பு சென்றது சிறிய விமானத்தில் பறந்தபடி புதுவையை எடுக்க இந்து அருணுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது பறக்கும் விமானத்தில் இருந்து புகைப்படம் எடுப்பது மிகவும் சிரமம் அனால் அதை அருண் வெற்றிகரமாக செய்து முடித்தார்.அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த பிறகு அவருக்கு மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தது மற்றும் அந்த படங்களுக்கு விருதுகளும் கிடைத்த்து .புதுவையில் மழை பெய்தால் உடனடியாக வீதிகளில் சென்று புகைப்படம் பிடிப்பார்.புதுவையை வருடம் முழுக்க வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பது இவரின் சிறப்பாகும் அதேபோல் புதுவையில் நடக்கும் நிகழ்வுகளை தவறாமல் படம் பிடித்து சமூக வலைத்தளங்கிளில் பதிவேற்றம் செய்வது இவரது வாடிக்கையான செயல் புதுவையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று வாழும் மக்களுக்கு இவர் எடுக்கும் புகைப்படங்களே அவர்கள் புதுவையை மறக்காமல் ரசிக்கின்றனர் ஆனால் இன்றளவும் இவர் எடுக்கும் அனைத்து புகைப்படம் DSLR காமிராவில் எடுக்கப்பட்டவை அல்ல சாதாரணமான Nikon Coolpix காமிராக்களில் எடுக்கப்பட்டவைதான் .காமிராவிடம் விஷயம் அல்ல புகைப்படம் எடுக்கும் நம்மிடம் தான் உள்ளது

Post a Comment

0 Comments